பிரதமர் மோடி: கூட்டு முயற்சி காரணமாக, குணமடைவோர் மற்றும் இறப்பு விகிதங்களில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக உள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதம் அதிகமாக உள்ளதால், வைரஸ் பலவீனமாகிவிட்டது; எளிதில் குணமடைந்துவிடலாம் என மக்கள் நினைக்கின்றனர். இது அஜாக்கிரதையான செயலாகும். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, மக்கள் விழிப்புடன் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
@@'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. தடுப்பு மருந்து எப்போது தான் கண்டுபிடிப்பரோ என்ற, 'டவுட்'டுக்கு இன்னும் பதில் தெரியவே இல்லையே. இதில் தெளிவு இல்லாததால், மக்கள் விழிப்புடன் தான் உள்ளனர். அதனால் தான், நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் முரளீதரன்: இந்த வேல்யாத்திரை தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக இருக்கும். கேரளாவில் சபரிமலையை இழிவுபடுத்திய கட்சியில் ஒருவர் கூட, எம்.பி.,தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதுபோல, தமிழகத்திலும் நடக்க வேண்டும். தமிழக பாரம்பரியம், ஹிந்து கலாசாரத்தை போற்றுகிற கட்சியான, பா.ஜ.,வை தேர்தலில் ஆதரித்தால் தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்படும்.
'டவுட்' தனபாலு: அப்படியானால், வரும் சட்டசபை தேர்தலில், தி.க.,வின் ஆசிபெற்ற, கருப்பர் கூட்டத்தை கண்டிக்காத, தி.மு.க., மற்றும்அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்து விடுமோ என்ற, 'டவுட்' இயல்பாக எழுகிறதே. கேரள மக்கள் சிந்தனை வேறு; தமிழக மக்கள் சிந்தனை வேறு. எனவே, உங்கள் கனவு, நிறைவேறுவது சிரமமே!
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: ஏழு பேர் விடுதலையில், பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் கதையாக, தி.மு.க.,வின் செயல் உள்ளது. அன்று ஆட்சியில் இருந்த போது, நளினி தவிர யாரையும் விடுதலை செய்ய கூடாது என்று சொல்லி விட்டு, இன்று, ஏழு பேருக்கு விடுதலை வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கவர்னரை சந்திப்பது அப்பட்டமான தேர்தல் நாடகம்.
'டவுட்' தனபாலு: ராஜிவ் கொலையாளிகள் எழுவர் விடுதலை விவகாரத்தை, தி.மு.க., தன் அரசியல் பிரசாரமாகவும், ஓட்டுகளை சிதற விடாமல் வைத்திருக்கும் டெக்னிக்காகவும் பயன்படுத்துகிறதோ என்ற, 'டவுட்' நீண்ட காலமாக தமிழக மக்களுக்கு உண்டு. அதை அவ்வப்போது உண்மை என, தி.மு.க.,வும் நிரூபித்து வருகிறது!

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கொலையாளிகளுக்கு விடுதலை கேட்கும் தைரியம் எப்படி வந்தது ?.