dinamalar telegram
Advertisement

அழகிரி மகனுக்கு தி.மு.க.,வில் பதவி தயார்!

Share
Tamil News
அழகிரி மகனுக்கு தி.மு.க.,வில் பதவி தயார்!


@@''வேலையே செய்யாம சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் நகராட்சியில, 21 வார்டுகள் இருக்குது... இங்க, 32 நிரந்தர மற்றும் 100க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு
பணியாளர்கள் வேலை செய்யிறாங்க பா...
''இங்க, 250 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்குற தற்காலிக துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகள் சொல்ற வேலையை, சரியா செஞ்சிட்டு போயிடுறாங்க...
''ஆனா, மாசம் 20 ஆயிரத்துக்கும் மேல சம்பளம் வாங்குற நிரந்தர துப்புரவு பணியாளர்கள் சிலர், காலையில வந்து கையெழுத்தைப் போட்டுட்டு, கொஞ்ச நேரம் வேலை செஞ்சதா பாவ்லா காட்டிட்டு போயிடுறாங்க பா...
''இன்னும் சிலர், கடை, வீட்டு வேலைன்னு சம்பாதிக்கிறாங்க... இவங்களை சில அதிகாரிகள் தட்டி கேட்டப்ப, 'நாங்க உள்ளூர்காரங்க... நாங்க வச்சது தான் இங்க சட்டம்'னு
மிரட்டிட்டாங்க...
''இதனால, அவங்க வேலைகளையும் சேர்த்து, அப்பாவி தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பார்க்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கோவில் கோவிலா சுத்திட்டு இருக்காவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், அண்ணாச்சி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''அமித்ஷா வர்றதுக்கு முன்னாடி, முதல்வர் இ.பி.எஸ்., திருப்பதி போயிட்டு வந்தார்... கூட்டணி பேச்சு நல்லபடியா முடியணும்னு வேண்டிட்டு வந்தாரு வே...
''அதுக்கு சில நாட்கள் முன்ன தான், துணை முதல்வர் பன்னீர்செல்வம், திருப்பதி போயிட்டு வந்தாரு... இப்ப, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், கீழ் திருப்பதியில இருந்து நடந்தே மலைக்கு போய், ஏழுமலையானை தரிசனம் பண்ணியிருக்காரு... அங்க, சில சிறப்பு பூஜைகளையும் செஞ்சிட்டு வந்திருக்காரு வே...
''வழக்கமா, கார்த்திகை மாதம், சபரிமலைக்கு போறவர், இப்ப
விரதத்துல இருக்காரு... அடுத்து, திருச்செந்துார் போய், முருகனை பார்க்க போறாரு... தேர்தல் நெருங்குறதால, கோவில் கோவிலா அமைச்சர் சுத்துதார்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அது சரி... மக்கள் மேல நம்பிக்கை இல்லாம கோவிலை சுத்தறா போலிருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணா,
''சமரசப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, வாரிசுக்கு பதவி தர முன்வந்திருக்கா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார்.
''தி.மு.க., தகவலா... சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வாரிசுன்னு சொன்னதுமே, தி.மு.க., தகவல்னு 'கப்'புன்னு புரிஞ்சுண்டுட்டீரே...'' என, பாாரட்டிய
குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''மதுரையில இருக்கற அழகிரியிடம், தி.மு.க., மேலிடம், குடும்ப உறுப்பினர்கள் சிலர் மூலமா, சமரசப் பேச்சு நடத்தியிருக்கு... இதுல, அழகிரியின் வாரிசான தயாநிதிக்கு, தி.மு.க., மாணவர் அணிச் செயலர் பதவி வழங்க, முடிவு பண்ணியிருக்கா ஓய்...
''இதனால, மாணவரணி செயலர் பதவியில இருக்கற எழிலரசன் எம்.எல்.ஏ.,வுக்கும், படப்பை ஒன்றியச் செயலர் மனோகரனுக்கும்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைப் பிரித்து, மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்க முடிவு செஞ்சுருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க,
பெரியவர்கள் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அண்ணாத்தை பா ஜ பக்கம் சாய்வதை பார்த்ததும் மகனை உள்ளே இழுத்து தன்னைக்கட்டிக்கொள்கிறார்

Advertisement