தடுப்பூசி மூலம் உலகளாவிய நன்மைக்கு உதவுவது நமது கடமை
புதுடில்லி:கோவிட் தடுப்பூசி மூலம் உலகளாவிய நன்மைக்கு உதவுவது நமது கடமை என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
கொரோனா தொற்று எதிராக தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி அகமதாபாத், புனே , ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அகமதாபாத் ஜைடஸ் பயோடெக் பூங்கா, புனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஐ தராபாத், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் தடுப்பூசி மருந்து நல்ல ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல , உலகளாவிய நன்மையாகவும் இந்தியா கருதுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான கூட்டு போராட்டத்தில் அண்டை நாடுகள் மட்டுமல்லாது உலகின் பிற நாடுகளுக்கும் உதவுவது இந்தியாவின் கடமையாகும் என்றார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (2)
கோவிட் தடுப்பூசி மூலம் உலகளாவிய நன்மைக்கு உதவுவது நமது கடமை என பிரதமர் மோடி கூறி உள்ளார்.- இதுவரையில், தடுப்பு மருந்தோ, குணமாக்கும் மருந்துகளையோ தயாரிக்க பெரிய முயற்சி எடுக்காத, அதற்கென நிறுவனத்தை தத்து எடுத்து நிதியுதவி செய்து, அவை உருவாக்கும் மருந்துக்கு உரிமை கோராத ஒரு பிரதமர், இன்று நம்மை அகில உலக கினியாப் பன்றிகளாக மாறச் சொல்கிறார். இந்த வகையில் இவரும் ஒரு மன்மோகன் ஆனாரோ விரைவில் நோபல் பரிசு பெறுவாரா
நமது பிரதமரின் எண்ணமோ நன்றாக இருக்கிறது. ஆனால், அவர் எண்ணத்தை, செயல்களை சரியான கோணத்தில் பார்க்காமல், எடுத்துக்கொள்ளாமல், அதில் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.