dinamalar telegram
Advertisement

நம்முடைய மொபைல் போனில் ஆயுதத்தை புகுத்தியுள்ளார் மோடி

Share
Tamil News
''நம்முடைய மொபைல் போனில் ஆயுதத்தை புகுத்தி, பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு கேட்டு வருகிறார். இந்த வேவு பார்க்கும் தேச விரோத செயல் குறித்து பார்லி.,யில் விவாதிக்க அரசு தயாராக இல்லை,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறினார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மூடி மறைப்பர்நம் நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.'இப்பிரச்னை குறித்து பார்லி.,யில் விவாதிக்க வேண்டும்' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அமளி ஏற்பட்டு, மழைக்கால கூட்டத் தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்., உட்பட 14 எதிர்க்கட்சிகளின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியதாவது:இஸ்ரேல் உளவு மென்பொருளை மத்திய அரசு வாங்கியுள்ளதா; அதன் மூலமாக குறிப்பிட்ட சிலரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக்க வேண்டும். இதை பார்லி.,யில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நம் போன்களில், பிரதமர் மோடி ஒரு ஆயுதத்தை புகுத்தியுள்ளார். அதன் மூலம், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை வேவு பார்த்து வருகின்றனர். இது குறித்து பார்லி.,யில்பதிலளிக்க மறுக்கின்றனர்.நாங்கள் பார்லி.,யை செயல்பட விடாமல் தடுப்பதாக மோடி கூறுகிறார். எங்களுடைய கேள்விக்கு பார்லி.,யில் ஏன் பதிலளிக்க மறுக்கின்றனர்? கேள்வி எழுப்பாமல் இருந்தால், பிரச்னையை மூடி மறைத்து விடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்கவில்லைஇக்கூட்டத்தில் சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தி.மு.க., தேசிய வாத காங்., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.அதே நேரத்தில் மொபைல் போன் ஒட்டு கேட்பு தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைத்துள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யின் திரிணமுல் காங்., பங்கேற்கவில்லை.மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக, டில்லி வந்துள்ள மம்தா பானர்ஜி பல தலைவர்களை தனித்தனியாக சந்தித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் அவருடைய கட்சி பங்கேற்கவில்லை.

'சசி தரூரை நீக்க வேண்டும்'எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து, பா.ஜ., மூத்த எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது:காங்கிரஸ், பார்லிமென்டை நடத்தவிடாமல் தடுக்கிறது. பெகாசஸ் பிரச்னையை பார்லி., நிலைக்குழுவிலும் கிளப்பப் பார்க்கிறது. பார்லி.,யின் நீட்சிதானே நிலைக்குழு. பார்லி.,யில் விவாதம் நடக்காத நிலையில், நிலைக்குழுவில் எதற்காக பெகாசஸ் பற்றி விவாதிக்க வேண்டும். நிலைக்குழு தலைவர் சசி தரூர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முயல்கிறார்.
சபாநாயகரின் அதிகார வரம்பின் கீழ்தான், நிலைக்குழுத் தலைவர் இயங்க முடியும். எனவே, நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து சசி தரூர் நீக்கப்பட வேண்டும். இது குறித்து, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (38)

 • kurinjikilan - Madurai,இந்தியா

  ஏம்ப்பா உனக்கு ஏறு வேலையே இல்லையா..முதலில் வருடத்திற்கு மூன்று மாதம் இந்தியாவிலிருந்து ஆப்சன்ட் ஆகி எங்கே செல்கிறாய் ? உனக்கு யார்யார ஆதரவு அவர.கள் எப்படி பட்டவர்கள் என்பது போட்டோவைப் பார்த்தாலே தெரியுதே ?

 • Raj - Chennai ,இந்தியா

  ஒரு போனுக்காகவா சாத்தாண்குளத்தில் காவல் கொலை? வேடிக்கையாக உள்ளது. துத்துக்குடி 13 பேர் சுட்டு கொலை? துத்துக்குடியில் 2006 ல் இருந்து சாலைகள் இல்லை. இரு ஆட்சிகளும் ஆளுக்கு ஒரு புறம் கழிவு நீர் காலவாய் திட்டம் முடிக்காமல்

 • sankaseshan - mumbai,இந்தியா

  Durvesh தமிழ்நாட்டில் என்ன வாழு தாம் அதேமாதிரி ஆட்டு மந்தை கூட்டம் தான் இங்கேயும் .

 • raja - Cotonou,பெனின்

  அவரு நுழைக்கிற வரைக்கும் நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த....

 • yavarum kelir - yadhum vore ,இந்தியா

  அதெல்லாம் சரிதான். அரசியல் கூட்டத்தில அங்கி ஒன்னு இருக்கே.. அதுக்கு என்ன வேலை? அவர் கைல என்ன கருப்பா? ?

Advertisement