dinamalar telegram
Advertisement

பார்லி., கூட்டத் தொடருக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்

Share
Tamil News
புதுடில்லி:எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், காங்., தலைவர் சோனியாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.''அப்போது, பார்லி., கூட்டத் தொடருக்குப் பின், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பேன்,'' என்றார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு, மார்ச், ஏப்., மாதங்களில் நடந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் கடும் போட்டியை எதிர்த்து, திரிணமுல் காங்., தலைவர், மம்தா பானர்ஜி மாபெரும் வெற்றியைப் பெற்றார். தேர்தல் வெற்றிக்குப் பின், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளார். இதற்காக, டில்லிக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் மம்தா பானர்ஜி.

காங்., மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரை அவர் சந்தித்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.இந்நிலையில், சோனியாவை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது.

அதன்பிறகு, நிருபர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:பா.ஜ.,வை வெல்ல அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; இணைந்து செயல்பட வேண்டும். சோனியாவுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.வரும், 2024 லோக்சபா தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்த நாட்டுக்கும் இடையேயான தேர்தலாக இருக்கும். தற்போது நடக்கும் பார்லி., கூட்டத் தொடருக்குப் பிறகு, மற்ற கட்சித் தலைவர்களுடன் பேச உள்ளேன். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மதம் வெறி பிடித்த வர்களை ஊர் ஒன்று கூடித்தான் சிலசமயங்களில் கட்டுக்குள் அடக்க இயலும். அவர்களைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாஜகவினருக்கு பயம் ஆரம்பித்து விட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால் தான், இது நடக்காது. இவர் வரமாட்டார். இவர் வந்தால் அவர் வரமாட்டார் என்று பயத்தில் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள்.

 • Nagercoil Suresh - India,இந்தியா

  மம்தா சேர்ந்தால் அந்த இடம் ....இவரை தேசியக்கட்சிகள் சேர்த்துக்கொள்ளக்கூடாது, கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும், இவருடைய கட்சி நாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டியது, பிகாருக்கு லல்லூ, மேற்கு வங்கத்திற்கு மம்தா இருவரும் சேர்ந்து மாநிலத்தை 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்துள்ளார்கள்...

 • இரா. சந்திரன் - சென்னை,யூ.எஸ்.ஏ

  காங்கிரஸ் ஊழல் செய்கிறது என்றுதான் பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆரம்பித்தார். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டுடன் சேர முடியாது. உபி யில் முலாயம் அல்லது மாயாவதி ஒருவர்தான்.. இருவரும் சேர மாட்டார்கள். தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக ஏதாவது ஒன்றுதான் வரும். நவீன் பட்நாயக் சில்லறை அரசியல் செய்யமாட்டார். பிஹாரில் நிதிஷ் வரமாட்டார். ஆந்திராவில் நாயுடு அல்லது ஜெகன் யாராவது ஒருவர்தான் வருவார். புலி ஆடு புல்லுக்கட்டு கதைதான்... கூட்டணி உருவானாலும் தேர்தல் வரை தாங்குமா? போன தேர்தலில் இதேபோல நாயுடு முயற்சி செய்து கடைசியில் மூக்கு உடைப்பட்டதுதான் மிச்சம்.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  புது கூட்டணி உருவாக்குங்குள். என்னமோ இந்த ரெட்டை குழல் துப்பாக்கிகள் வந்துதான் இந்தியாவை காப்பாற்ற போற மாதிரி ஒரு மாயை உருவாக்கி உள்ளனர். புது கூட்டணி உருவாக்கி ஒரு கழகத்தை ஏற்படுத்துங்கள் அப்படியாவது ஒரு நேர்மையான ஆட்சி கொடுக்கட்டும் இருக்குற சொற்ப ஆண்டுகளில்.

Advertisement