dinamalar telegram
Advertisement

பார்லி.,யை முடக்குவது தேச விரோதம்: எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ., பாய்ச்சல்

Share
Tamil News
புதுடில்லி : 'கொரோனா தொற்றால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி, பார்லிமென்டில் விவாதித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், போன் ஒட்டு கேட்பு போன்ற முன் கூட்டியே திட்டமிட்ட விவகாரங்களை கிளப்பி, எதிர்க்கட்சிகள் பார்லி.,யை முடக்குவதுதேச விரோதம்' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.இது பெரும் பர பரப்பை ஏற்படுத்திஇருக்கிறது.

புகார்இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த, 19ம் தேதி துவங்கியது. ஆனால், போன் ஒட்டு கேட்பு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், பார்லி.,யின் இரு அவைகளும், எந்த பணியையும் மேற்கொள்ள முடியாமல், தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. பார்லி.,யின் முடக்கத்தால், முக்கியமான மசோதாக்களை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.


இந்நிலையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா நேற்று கூறியதாவது:கொரோனா தொற்றால் நாடும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றா வது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில், பார்லி.,யில் கொரோனா பற்றியும் மூன்றாவது அலை பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.ஆனால், பார்லி.,யை முடக்கி, மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து விவாதிக்க விடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன.

இது தேச விரோத செயல் என்பதில் சந்தேகம் இல்லை. பெகாசஸ் விவகாரம், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உருவாக்கிய சதி. போன் ஒட்டுக் கேட்பில், எந்த தொடர்பும் இல்லை என, மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. ஆனால், எதற்கும் உதவாத பிரச்னைகளை முன் வைத்து, பார்லி.,யை முடக்குவது காங்கிரசின் வழக்கமாகி விட்டது. தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என, ராகுல் சந்தேகித்தால், அது பற்றி போலீசில் புகார் செய்யட்டும். போலீஸ் விசாரணையில் உண்மை தெரியும்.

அக்கறைஇரு அவைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி, கொரோனா தொற்று பற்றி விவாதிக்க வேண்டும் என கூறியவர்கள், இப்போது, பார்லி.,யை முடக்குகின்றனர்.போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உள்ளதாக ராகுல் கூறுகிறார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் இதுவரை கூட்டணி அமைத்து, தோல்வியை தான் சந்தித்து உள்ளன. ஏனெனில், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகளுக்கு, தங்கள் குடும்பத்தின் மீது தான் அக்கறை. ஆனால், வாரிசு அரசியலில் வராத பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி யில் மட்டுமே, அக்கறை காட்டி வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

மசோதாக்கள் நிறைவேற்றம்'போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி விவாதம் நடத்த வேண்டும்' என கோரி, பார்லி.,யின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் நேற்றும் அமளியில் ஈடுபட்டன.லோக்சபாவில் அமளிக்கு இடையே, 23 ஆயிரத்து, 675 கோடி ரூபாய் கூடுதல் செலவின தொகைக்கு அனுமதி வழங்கும் மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதா உட்பட மூன்று மசோதாக்கள் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறுவர் நீதி சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறுவர் நீதி திருத்த மசோதா - 2021, ராஜ்யசபாவில் நேற்று, அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.எதிர்க்கட்சிகள் அமளியால், பார்லி.,யின் இரு அவைகளும் நேற்றும், நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஏம்ப்பா சுரேஷு ,அன்பு , அவங்க செஞ்சாங்க ,எனவே நாங்க முடக்கறோம் இதை சொல்ல வெட்கமாக இல்லை . உங்களு க்கு பெருந்தன்மை கிடையாதா ? எப்படி இருந்தாலும் மக்கள் வரி பணத்தை வீணாக்குவது தவறில்லையா ?

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கேள்விக்கு நேரம் ஒதுக்குவது சிறந்த ஜனநாயகக்கு உதாரணமாக இருக்கும்

 • rajan - erode,இந்தியா

  ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை பாராளுமன்றத்தை முடக்கி தேச துரோக செயல் செய்த பிஜேபி இப்போது சாத்தான் வேதம் ஓதுவது போல செயல்படுகிறது

 • radha - tuticorin,இந்தியா

  ஓஹோ நீங்க செஞ்சா தேச நலன். எதிர்க்கட்சிகள் செஞ்சா தேச விரோதம். நல்லா இருக்கு ஒங்க நியாயம்.

 • radha - tuticorin,இந்தியா

  ஓஹோ நீங்க செஞ்சா தேச நலன். எதிர்க்கட்சிகள் செஞ்சா தேச துரோகம். நல்லா இருக்கு

Advertisement