dinamalar telegram
Advertisement

வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை!

Share
Tamil News
சென்னை " வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தடை ஏதும் விதிக்கவில்லை. அட்வகேட் ஜெனரலின் பதிலுக்கு பின், இச்சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரிப்பதாக தெரிவித்தது.


மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி, 2021 பிப்ரவரியில் சட்டம் இயற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அரசாணைஇந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதனால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகவும் மனுக்களில் கூறப்பட்டன.

மனுக்களுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்நிலையில், சிறப்பு ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசாணை, 26ம் தேதி வெளியிடப்பட்டது.


நேற்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வழக்கு விசாரணையை துவங்குவதற்கு முன், வழக்கறிஞர் பி.ரஜினி என்பவர், ''குறிப்பிட்ட பிரிவினருக்கு, 10.5 சதவீத ஒதுக்கீடுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விளிம்பு நிலை சமூகம் பாதிக்கப்படும்.

''அரசியல் காரணங்களுக்காக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனவே, தடை கோரிய வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார்.உடனே, அரசு வழக்கறிஞர் முத்துகுமாரிடம், 'ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. அரசிடம் விபரம் கேட்டு, பிற்பகலில் கூறுங்கள்; இல்லையென்றால் தடை விதிக்கப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுழற்சி முறைபிற்பகலில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''பிப்ரவரியில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 23; மதுரை கிளையில் ஐந்து; உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

''சட்டத்தை பின்பற்றி, அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டுஉள்ளது,'' என்றார்.இதையடுத்து, தலைமை நீதிபதி, 'மேற்கொண்டு செயல்படுத்த ஏன் தடை விதிக்கக் கூடாது?' என, கேள்வி எழுப்பினார். அதற்கு, அட்வகேட் ஜெனரல், 'சுழற்சி முறையிலான ஒதுக்கீட்டுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், தடை விதிக்க மறுத்துள்ளது. அதனால், தடை விதிக்கத் தேவை இல்லை' என்றார்.


பட்டியலிடப்படவில்லை

வழக்கறிஞர் பி.ரஜினி ஆஜராகி, ''உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கட்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும். தடை கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை,'' என்றார்.
வழக்கு தொடுத்தவர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வி.கார்த்திக், ''சட்டத்தை எதிர்த்து, முதலில் வழக்கு தொடர்ந்தேன். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இந்த சட்டம் உள்ளது,'' என்றார்.உடனே, தலைமை நீதிபதி அமர்வு, 'இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. ஆகஸ்ட் மாதம், இரண்டாவது வாரத்தில் விசாரிக்கப்படும்' என, தெரிவித்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @ர ச.பதி, "சுய அறிவில் முன்னேற ஊக்குவிப்பது இல்லையே? சுய அறிவில் முன்னேற முனைந்தவர்களை, கல்லூரி இன்டெர்னல் பரீட்சைகளில் குறைவாக மார்க் போட்டும் நேர்காணலில் மற்றும் ப்ரமோஷன் பரீட்சை களில் ப்ரமோஷன் இன்டர்வியூக்களில் அதைவிட க்குறைவாக மார்க் போட்டு ஒதுக்குகிறார்களே. இதை முறியடிக்கத் தான் இட ஒதுக்கீடு.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @கா.ம.பாஸ்கரன்... முன்னேற முடியாதவர்கள் என்பதால் தான் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த அடிப்படை யினைப் புரிந்து கொள்ளுங்கள். மேற்படிப்பு க்கு இடம் கிடைத்தால் சேர்க்கிறேன். இல்லாவிட்டால் படிப்பை நிறுத்து என்று சொல்கிற பெற்றோரின் பிள்ளைகள் முன்னேறத் தான் இட ஒதுக்கீடு. இதுதான் இட ஒதுக்கீடு தத்துவம். உணர மறுக்காதீர்கள்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  நூறு சதவீதத்தையும் கொடுங்கள். அப்போதாவது புலம்பல் நிற்குமா என்று பார்க்கலாம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மத்திய பாஜக அரசு 27% இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உண்டு என்று உறுதியாகச் சொல்லிவிட்டநன் மூலம் ஓட்டு அரசியலை ஒத்துக் கொண்டு விட்டது. .

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  இன்னும் எத்தனை நூறு ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு கொடுப்பீர்கள். சுய அறிவில் முன்னேற ஊக்குவிக்க மாட்டீர்கலா

Advertisement