dinamalar telegram
Advertisement

சென்னையில் சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் அச்சம்

Share
சென்னை: சென்னையில், பிரதான சாலைகள் மட்டுமின்றி, மாநகராட்சி வணிக வளாகம் என பல்வேறு இடங்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில், மாநகராட்சி அனுமதியின்றி நுாற்றுக்கணக்கான இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தணிகாசலம் சாலை, தி.நகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட இடங்களில், ஏராளமான விளம்பர பேனர்கள், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
தனியார் மற்றும் மாநகராட்சி கட்டடங்களில் பேனர் வைக்க, தனிநபர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை.
ஆளுங்கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு, சட்டவிரோதமாக, பேனர் வைக்கும் கலாச்சாரம் தொடர்வதாக, பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். காவல் துறை மற்றும் நீதித்துறையினர் நேரடியாக தலையிட்டு, மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் படும் துயரம் மட்டும் நீங்கப்போவது இல்லை. அடுத்த பேனர் சாவுக்கு இவனுங்க என்ன முட்டுக் கொடுத்து விளக்கம் சொல்லப்போறானுங்களோ?

Advertisement