dinamalar telegram
Advertisement

133 யோகாசனம் செய்து சிறுமி விழிப்புணர்வு

Share
Tamil News
திருவண்ணாமலை ;கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 133 யோகாசனங்கள் செய்து, 7 வயது சிறுமி விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருவருட்பா ஆசிரமத்தில், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை விளக்கும் வகையில், இரண்டாம் வகுப்பு படிக்கும் சமந்தா, 7, என்ற சிறுமி, 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.பேப்பர் கப் மீது அமர்ந்து பத்மாசனம் மற்றும் சிரசாசனம், தனுசாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

720 மணி நேரம்



மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறை, தேனமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை, டில்லி கலை இலக்கிய பேரவை, தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி.ஆரஞ்சு வேல்டு ரிக்கார்ட் அமைப்புகள் சார்பில் உலக சாதனை முயற்சியாக, இணையவழியில் 720 மணி நேர முத்தமிழ் கலை விழா நடந்தது.ராமநாதபுரம் மருங்கன் குழுவினர் நாதஸ்வர இசை, விருதுநகர் லட்சுமி குழுவினரின் நாட்டுப்புற இசைப்பாடல்.
துாத்துக்குடி சுதா குழுவினரின் வில்லுப்பாட்டு, திருப்பத்துார் குமரேசன் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் தெருக்கூத்துகள், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் 720 மணி நேரம் நடந்தன. இந்நிகழ்ச்சி உலக சாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    உலக சாதனையாளர் நீடூழி வாழ்க. மனமார்ந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்.

Advertisement