dinamalar telegram
Advertisement

வெளிநாட்டில் அட்மிஷன்: மோசடி பேர்வழி கைது

Share
விருகம்பாக்கம்: வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாகக் கூறி, 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் 23. இவர், மேல் படிப்பிற்காக லண்டன் செல்ல முயற்சித்து வந்தார். அப்போது, அதே அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து பிளாக்கில் உள்ள கார்த்திக் 35, கார்த்திகா 30, தம்பதி, வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாகக் கூறி, வெங்கடேஷிடம் கடந்த டிசம்பரில், 38.90 லட்சம் ரூபாய் பெற்றனர்.
ஆனால், அட்மிஷன் வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கார்த்திக் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement