dinamalar telegram
Advertisement

உலகத் தர விளையாட்டு பயிற்சி :முதல்வர் அறிவுறுத்தல்

Share
Tamil News
சென்னை : ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஒலிம்பிக் சர்வதேச மற்றும் இந்திய அளவிலானப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும்.

விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சர்வதேச போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்கு பெற்று பதக்கங்கள் வெல்ல வேண்டும்.அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என்பதை பறைசாற்றும் வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள் ஆர்வலர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல் சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையானப் போட்டிகளுக்கும் உயர் தரப் பயிற்சி அளித்தல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பாரம்பரிய சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமைச் செயலர் இறையன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வவர்மா பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Rajkumar - Bengaluru,இந்தியா

    சென்னை அல்லாமல் பிற மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்.. பிரமாண்ட விளையாட்டு நகரம் அமையப்பட வேண்டும் . சென்னை மட்டுமே வளர்ச்சி அடைவது நல்லதல்ல

  • duruvasar - indraprastham,இந்தியா

    விளையாட்டுகளிலும் 69 % இட ஒதுக்கீடு முறையை அமுல்படுத்தி சமூகநீதியை நிலை நிறுத்தவேண்டும். வன்னியருக்கான உள் ஒதுக்கீடையும் முதல்வர் கவனித்தில் கொள்ளவேண்டும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இந்த கூட்டத்தின் பயனாக எத்தனை சதவிகிதம் வேலைகள் உடனே நடக்கக்கூடியவை? 0% என்று உறுதியாகச்சொல்லலாம். திட்டமிடாமல் கூட்டம் மட்டும் போட்டால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. திட்டமிடல் - ஆசிரியர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சி - நிதி ஒதுக்கீடு - பள்ளிகளில் வசதி - மாணவர்களை அடையாளம் கண்டு தொடர் பயிற்சி - போன்ற அடிப்படை விசயங்களை செய்தால் 10 ~ 15 ஆண்டுகளில் பலன் கிடைக்கும். பாலில்லாத சிக்சர்களை அடிப்பதில் பயனில்லை என்பதை திமுக உணரவேண்டும்.

Advertisement