dinamalar telegram
Advertisement

அடுக்குமாடி வாகன நிறுத்தம்: விமான நிலையத்தில் விறு.. விறு..

Share
சென்னை: ‛‛சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள், வரும் நவம்பரில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி 2019ல் துவங்கியது. இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதில், ஒரே நேரத்தில் 2,000 கார்கள் நிறுத்த முடியும்.
இது குறித்து, சென்னை விமான நிலைய இயக்குனர் ஷரத் குமார் கூறியதாவது:
அடுக்குமாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணி ,95 சதவீதம் நிறைவடைத்துள்ளது. இதில், தியேட்டர், சில்லரை வர்த்தக கடைகள், உணவுக் கூடங்கள், கார் பார்க்கிங் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. நவம்பர் மாதத்தில் இந்த வளாகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இதனால், விமான நிலையத்திற்கு வரும் பயணியர் வெளியில் செல்லாமல், இந்த வணிக வளாகத்திற்குள் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement