dinamalar telegram
Advertisement

சசி எதிர்ப்பில் இணைந்து செயல்பட முடிவு இ.பி.எஸ்., -- ஓ.பி.எஸ்., திடீர் கைகோர்ப்பு

Share
Tamil News
இரண்டு நாட்களுக்கு முன், அவசரமாக டில்லி சென்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., சென்னை திரும்பியுள்ளனர்.
டில்லி சென்ற இருவரும், 'தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. சசிகலாவின் முயற்சியும், அ.தி.மு.க.,வுக்கு சவாலாக உள்ளது' என்று மோடியிடம் கூறியுள்ளனர்.அதை கேட்ட மோடி, 'லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுக்கும் நடவடிக்கை இயல்பானது. தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசு செய்யும் விஷயம். இதில், மத்திய அரசு தலையிட முடியாது' என கூறியிருக்கிறார்.மேலும், 'சசிகலா நடிவடிக்கை குறித்து, மத்திய அரசு எதுவும் செய்ய இயலாது. ஆனால், சசிகலாவுடன் இணைந்து அரசியல் செய்வது தான், அ.தி.மு.க.,வுக்கு நல்லது என பலரும் கூறுகின்றனர்.


'அதில், எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. இது தொடர்பாக பேச வேண்டும் என்றால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாருங்கள்' என, கூறி விட்டார்.
மறுநாள், அமித் ஷா நிறைய பேசியுள்ளார். அவர் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், தேர்தல் நெருக்கத்தில் தமிழகம் வந்தேன். அப்போதே, 'சசிகலாவையும், அ.ம.மு.க.,வையும் இணைத்து அரசியல் செய்யுங்கள்' என்று புள்ளி விபரங்களுடன் தெளிவாக கூறினேன். ஆனால், கேட்க மறுத்து விட்டீர்கள்.

இன்று, அவர் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்றதும், டில்லிக்கு வருகிறீர்கள். இதில், பா.ஜ., என்ன செய்ய முடியும்?சிறிது காலம் சசிகலா அரசியல் செய்வார்; அதன்பின், ஓய்ந்து விடுவார். அந்த அளவுக்கு தான் அவரது செல்வாக்கு உள்ளது. அவரை நம்பி யாரும் செல்ல மாட்டார்கள். அதனால், அவரை கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால், அடுத்த லோக்சபா தேர்தலை நோக்கி, அ.தி.மு.க., திடமாக அரசியல் செய்ய வேண்டும். அதற்கு, தி.மு.க., மற்றும் மாநில அரசுக்கு எதிராக, தீவிர அரசியல் செய்யுங்கள். எது நடந்தாலும் பார்த்துக்கலாம்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார். 'அதன்படியே செய்கிறோம்' என, ஓ.பி.எஸ்., கூறினார்.
அமித் ஷா வணக்கம் போட்டு, இருவரையும் அனுப்பி விட்டார்.


இதன்பின், ஓ.பி.எஸ்.,சிடம், இ.பி.எஸ்., தனியாக பேசியுள்ளார். 'இருவரும் இணைந்து செயல்பட்டால் தான், கட்சிக்கு எதிர்காலம் இருப்பதாக நினைத்து, தொண்டர்கள் குழப்பம் இல்லாமல் இருப்பர். இல்லையென்றால், கட்சி மெல்ல கரைந்து விடும்' என கூறியுள்ளார்.
அதையடுத்து, இருவரும் ஒருமித்த மனநிலைக்கு வந்து விட்டனர். தொடர்ந்து ஓ.பி.எஸ்.,சும், சசிகலாவுக்கு எதிராக கருத்து கூற துவங்கியுள்ளார்.


பேட்டியில், சசிகலா பற்றி கேட்டதும், 'தனிப்பட்ட நபரோ, குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை, நான்கரை ஆண்டுகளாக அ.தி.மு.க.,வில் ஏற்படுத்தி இருக்கிறோம். 'எந்த நோக்கத்துக்காக அ.தி.மு.க., துவங்கப்பட்டதோ, அது இப்போது நிரூபித்து காட்டப்பட்டு வருகிறது. அதனால், யாராலும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, கூறியுள்ளார்.அதுபோல, ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர்கள் மீது, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்தால், அதை தைரியமாக எதிர்கொள்வது எனவும் இருவரும் முடிவெடுத்துள்ளனர். - நமது நிருபர் --
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எதிர்பார்த்ததுதான். வெற்றி A 2 க்குதான்.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  A1 ஐ பாலீசு போட்டு கரையேற்றிவிட்டார்கள். இப்போது, A2 வையும் திருட்டுக்கு கூடாரம் கறைவதற்குமுன் கரையேற்றி விடுவான்கள்.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  திருட்டுக் கும்பலின் தலைமையுடன், இனிமேல்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போகின்றது.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இப்போது, இருவரையும் சேர்த்து வைத்தது சசிதான். சேர்ந்தே விழவைக்கப் போவதும் அவரே..

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சாணக்கியம்.😂😂😂 // சிறிது காலம் சசிகலா அரசியல் செய்வார் அதன்பின், ஓய்ந்து விடுவார்.//

Advertisement