dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்: கமல்

Share
Tamil News
சென்னை, ''உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறை லோக்சபா நிலைக்குழுவிடம் கருத்துகளை பதிவு செய்து விட்டு தமிழகம் திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
ஒளிப்பதிவு திருத்த மசோதா குறித்து என்னுடைய கருத்தை வெளிப்படுத்த அனுமதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குழுவில் இருந்தவர்கள் என்னை போலவே பேச்சு சுதந்திரத்திலும் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்ததால் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது தனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது; அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • sankaseshan - mumbai,இந்தியா

    இதுவரை இணை யாத நடிகைகளுக்கு தூது விட்டாச்சா ?

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    தயார்னு அறிவிச்சிட்டாரு, யாராவது B டீமn USE பண்ண நினைக்கிறவங்க டீலுக்கு வரலாம். சொன்னதோட உண்மையான அர்த்தம் இது தான்.

  • s vinayak - chennai,இந்தியா

    கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆனது.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இவரும் டெல்லிக்கு போய்விட்டு வந்ததை சூசகமாக அறிவித்த இவரின் அரசியல் முதிர்ச்சியை காண மகிழ்ச்சியாக இருக்கிறது.. கண்ணு பட போகுதையா ஆண்டவரே..

  • duruvasar - indraprastham,இந்தியா

    தற்சமயம் பத்மா போயி பிரியா மட்டும் தான் இருக்காங்க. பொன்னு போயி ராஜ் மட்டுமாவது தேர்தல் வரை இருப்பாரா என்பதற்க்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். அடுத்த பண்ணை வீட்டு சந்திப்பில் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பாளர்கள் என எதிர்பார்க்கலாம். மய்யத்தின் தலைமையில் 3 வது அணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணமுடிகிறது.

Advertisement