dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்

Share
சென்னை : முதல்வர் ஸ்டாலின் மீதான பழைய வழக்கை, தமிழக அரசு திரும்ப பெற்றதை யடுத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, 2018 மே மாதம், தி.மு.க., சார்பில், சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.போராட்டம் தொடர்பாக,தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவராக இருந்த திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏழு பேர் மீது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.ஆலிசியா முன் நேற்று வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜராகி, இந்த வழக்கை திரும்ப பெறுவதற்கான அரசாணையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதை ஏற்ற நீதிபதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு பேர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (29)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    இவர்கள் ஆட்சியில் உள்ள பொது ஒன்றும் செய்ய முடியாது .கொலையே பண்ணியிருந்தாலும் அவர்கள் சுத்தமானவர்கள்.. ஜெய் ஹிந்த்.

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    இவரு மீதான வழக்கு வாபஸ் ...அதே சமயம் முந்தாநாளு பண்ணின போராட்டத்துக்காக ஈ பி எஸ் மீது வழக்கு பதிவு ...திருட்டு திராவிட கட்சியின் ஜனநாயகம் வேற லெவல் ...

  • AMBROSE SANTHASEELAN L - Madurai,இந்தியா

    இதே என்ன அதிசயமா?. தமிழ் நாடு முதல் அமைச்சர் ஆச்சே? முதல் அமைச்சருக்கு இல்லாத ஸ்பெஷல் மெட்ராஸ் ஹை கோர்ட் தீர்ப்பா. இது சாதாரண மக்களுக்கு கிடைக்காது.

  • sridhar - Chennai,இந்தியா

    மேலே ஒரு கோர்ட் இருக்கு . பின்னிடுவாங்க……

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    அரசியல் அமைப்பு சட்டம் வால்க. இந்தியன் பீனல் கோடு வால்க. குற்றவியல் நடைமுறைச் சட்டம் வால்க. தேர்தல் முறை வால்க. நீதித்துறை வால்க. சனநாயகம் வால்க. பணம் வெல்க.

Advertisement