dinamalar telegram
Advertisement

சட்டசபையில் வன்முறையில் ஈடுபடுவது கருத்து சுதந்திரமாகாது: சுப்ரீம் கோர்ட்

Share
புதுடில்லி : 'சட்டசபையில் வன்முறையில் ஈடுபடுவது, கருத்து சுதந்திரமாகாது. எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை, சட்டப் பாதுகாப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாது' என, கேரள எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த, 2015ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது, சட்டசபையில் மோதல் ஏற்பட்டது.அப்போதைய நிதி அமைச்சர் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடாமல், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய, இடது ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.சபாநாயகரின் இருக்கையை கீழே தள்ளி, லேப்டாப், கம்ப்யூட்டர், மைக் உள்ளிட்ட பொருட்களை உடைத்து, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, தற்போது மாநில அமைச்சராக உள்ள சிவன் குட்டி உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்ய, கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து கேரள அரசு மற்றும் பலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதன் விசாரணை முடிந்துள்ள நிலையில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கேரள சட்டசபையில் வரம்பு மீறி செயல்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதை மன்னிக்க முடியாது.
பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ள அவர்களுடைய செயலை, அவர்களுக்கு அளித்துள்ள சிறப்பு சலுகை, சட்ட பாதுகாப்பாக பார்க்க முடியாது.தங்களுடைய பணிகளை சிறப்பாகவும், எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மேற்கொள்ளவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு சில சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவதை, கருத்து சுதந்திரமாக பார்க்க முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • Nakkeeran - Hosur,இந்தியா

  சட்டசபையின் மாண்பை குறைக்கும் இது போன்றவர்கள் ஆயுள் வரைக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தண்டனை கொடுக்கப்படவேண்டும் .அப்போதுதான் இது மாதிரி சம்பவங்கள் குறையும்

 • vivek c mani - Mumbai,இந்தியா

  சரியான தீர்ப்பு. மக்கள் பிரதிநிதிகள், மக்கள் பணத்தில், மக்களுக்காக உழைத்து செயல்பட தேர்தெடுக்கப்படுகிறார்கள். மக்களின் சொத்தை சேதப்படுத்தி பின்பு மக்களுக்கு வரியினை ஏற்றி, மக்களை ஏமாற்றுவதற்காக மக்கள் இவர்களை தேர்தெடுப்பதில்லை. மற்ற பல ஜனநாயக நாடுகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் போல் இவர்கள் நடந்தால் இவர்களுக்கு செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் மிகவும் குறைய வாய்ப்புண்டு. உதாரணம் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சேல மேர்க்கெல். சாதாரண வீட்டில் வாழ்ந்துகொண்டு, தனது வீட்டு பணிகளையும் தாமே மேற்கொண்டு நாட்டையும் திறம்பட ஆள்கிறார்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  சபையில் புடவையை உருவி சுதந்திரமாக செயல்பட்டு, சடட்டசபை உறுப்பினர்களின் சுதந்திரத்தின் எல்லையை வறையறத்ததில் தமிழன்தான் முன்னோடி என்பதை இங்கு நினைவு கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 • Tgsoundarrajan Balu -

  அதற்கு காரணம் யார்

 • NACHI - CHENNAI,இந்தியா

  The elected representatives must set an example by maintaining utmost discipline in every walk of their life. Nowadays, disruption of Assembly and Parliament proceedings are on the rise and complete washout of the sessions are happ ening. For any employed person, if he/she goes on strike, they lose their salary, whereas, in our country, these elected representatives do not lose even a pie. Our law shall be amended in such a way, NO WORK NO PAY is applicable to legislators also. Tax payers money is looted by these legislators.

Advertisement