dinamalar telegram
Advertisement

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் ; அரசு பதில்

Share
புதுடில்லி :'ஜம்மு - காஷ்மீரில், இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு, உரிய நேரத்தில், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்' என, மத்திய அரசு கூறி உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019 ஆக.,5ல் நீக்கப்பட்டது. இந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பான கேள்விகளுக்கு, லோக்சபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளதாவது:முழுமையாக அமைதி திரும்பிய உடன், உரிய நேரத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில், 2020ல், பயங்கர வாத சம்பவங்கள், 59 சதவீதம் குறைந்து உள்ளது. இந்தாண்டில், ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 32 சதவீதம் குறைந்துள்ளது.

காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்களை, மீண்டும் குடியமர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள, காஷ்மீரி பண்டிட் மற்றும் டோக்ரா ஹிந்து பிரிவைச் சேர்ந்த, 900 குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

    \\\பருத்தி கொடோவினிலேயே இருந்திருக்கலாம்\\\\\\\மாநில அந்தஸ்து(இந்தியாவின் பிற மாநிலங்கள் போல்) வேறு சிறப்பு அந்தஸ்து(ஆர்டிகிள் 370) வேறு, இந்த வேறுபாடுகூட புரியவில்லையா உங்களுக்கு, உங்கள் பதிவுகளின் மாண்பு இதுபோன்றதே போலும்,

  • SKANDH - Chennai,இந்தியா

    இனி தலைகீழாக நடந்தாலும் பழைய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிடையாது.இதுவரை மற்ற இந்தியவர்களை ஏமாற்றியாச்சு. இனி ஏமாற்ற முடியாது. இந்திய அரசு லடாக்கை நன்கு முன்னேற்ற வேண்டும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    எல்லையில் இருக்கும் எந்த மாநிலத்திலும் குறிப்பிட்ட மதத்தினர் குவிவதை தடுக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும். ஊடுருவல்க்காரர்களை முதலில் நாட்டைவிட்டு வெளியே அனுப்பத்தேவையான வேலைகளை ஆரம்பிக்கவேண்டும். இந்தியா இந்தியருக்கே என்று உரக்கச்சொல்ல வேண்டும்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    பருத்தி கொடோவினிலேயே இருந்திருக்கலாம்.

Advertisement