dinamalar telegram
Advertisement

மேகதாது அணை விவகாரத்தில் அரசுக்கு தமிழக பா.ஜ., துணை

Share
நாகர்கோவில் : மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும் என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது:நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப் படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.நீட் தேர்வு உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் பா.ஜ., எதிர்க்கப்போவதில்லை.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா

    பயமே அதுதான், இப்படி தானே சட்டசபையில் neettu நீ நீட்டா ஆதரவு என்று ஆதரித்த அனால் கரு நாகராஜ் என்கிற எட்டப்பன் ஒரு வழக்கு இப்படி சேயும் குயுக்தி கூட்டம் தான் நீங்கள்

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    அபபோதான், திமுக பிஜேபியின் மீது மேகதாது அணை விவகாரத்தில் குறை சொன்னால், நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவு அளித்தோம், நீங்கள் அணை கட்டுவதை தடுக்க தவறிவிட்டீர்கள் என அரசியல் செய்ய மட்டுமே இந்த இரட்டை நிலைபாடு

  • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

    தேவை இல்லாமல் அரசியல் செய்வதை எல்லோரும் ஒதுக்கி வைத்துவிட்டு நிரந்தர தேர்வாக தேசிய நதி நீர் இணைப்புக்கு மத்திய அரசை வற்புறுத்துங்கள்

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    இதை பப்ளிக்காக கர்நாடகா, டில்லிக்கு உணர்த்தும்வண்ணம் ஒரு DEMONSTRATION பண்ணுங்களேன்.....

  • என்னுயிர்த்மிழகமே - Ameerpet ஐதாபாத்,இந்தியா

    அருமையான நிலைப்பாடு ஆனா குடும்ப வழக்கப்படி தமிழர்களின் முதுகில் குத்துவோர் அல்லவா ஆட்சி செய்கிறார்கள்

Advertisement