dinamalar telegram
Advertisement

மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு: பிரதமரிடம் எம்.பி.,க்கள் கோரிக்கை

Share
புதுடில்லி : மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பிரதமரிடம்தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் பங்கேற்க வேண்டும். விதிகளின்படி, மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், இளங்கலையில், 15 சதவீத இடங்கள் மற்றும் முதுநிலையில், 50 சதவீத இடங்களை, மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

இந்த காலி இடங்களில், அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இல்லை.
இந்திலையில், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மத்திய இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், பா.ஜ.,- எம்.பி.க்களான கணேஷ் சிங், சுரேந்திர சிங் நாகர் மற்றும் உபி.,யின் ஆப்னா தளம் எம்.பி.,யும், மத்திய இணை அமைச்சருமான அனுப்ரியா படேல் உள்ளிட்டோர், பிரதமர் நரேந்திர மோடிக்குநேற்று ஒரு கடிதம் எழுதினர்.

அதன் வாயிலாக, 'மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில், ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • அப்புசாமி -

    சித்தே பொறுங்கோ. புது கல்விக் கொள்கை அறிவிக்கப்.போறார். அதில் பழைய திண்ணை, கல்லூரி எல்லம் வேண்டாம்னு மாணவர்கள் சொல்லிட்டாளாம். அதனால் ஆன்லைனில் எல்லிருக்கும் சீட் கிடைக்கப் போறதாம். யார் வேண்டும்னாலும் படிக்கலாமாம். இட ஒதுக்கீடு எல்லாம் பழைய விஷயம். ஜெய் ஹிந்த்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    ஒரு இட ஒதுக்கீடும் கிடையாது. வேண்டுமானால் பிச்சை எடுத்து பிழைக்கவும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அக்கிரமம்.

  • R Srinivasan - hyderabad,இந்தியா

    இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் 100% ஒதுக்கீடு கேட்பார்களோ என்னவோ?

  • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

    எல்லாவற்றிலும் அரசியல் செய்வதை விட்டு விட்டு நாடு முன்நேர ஆலோசியுங்கள். இல்லாவிடில் பதவியை விட்டு வெளியேறுங்கள்.உண்மையில் நாடு முன்னேற விரும்பினால் பொருளாதாரத்தில் பின் தாக்கியவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு,கொடுங்கள்.நான் பிஜேபியின் அபிமானி என்றாலும் சாதீய வழியில் இட ஒதுக்கீடு அளிக்கும் எவரும் தவறு செய்பவர்களே.

Advertisement