dinamalar telegram
Advertisement

கொரோனா பலிக்கு இழப்பீடு: ஆலோசிப்பதாக அரசு தகவல்

Share
புதுடில்லி : 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனாவில் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை நடந்து வருகிறது' என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேள்வி ஒன்றுக்கு, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • அப்புசாமி -

    போனவங்களுக்காவது பான்ஹ்சி லட்சம் போடுங்க. வழிச்செலவுக்கு உதவும்.

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    ஒரே தவணையாக கொடுப்பது என்பது மிகவும் கஷ்டம். எனவே மாத தவணையாக (முதியோர் ஊதியம் போல்) ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு கொடுக்கலாம். இதை கொடுக்கிறோம் என தெரிந்து எல்லா மாநிலமும் சரியான மரண எண்ணிக்கைகளை கொடுப்பர் என எதிர் பார்க்கலாம். அதிலும் தவறு நடக்க வாய்ப்பே அதிகம்.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    கொரோனாவால் இறந்ததாக மருத்துவ சான்றிதழ் வாங்க கப்பம் கட்ட வேண்டியிருக்குமே ..

Advertisement