dinamalar telegram
Advertisement

ஐந்து மாநில தேர்தல் : டில்லியில் ஆய்வு கூட்டம்

Share
புதுடில்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் கமிஷன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியது.

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டு மார்ச்சிலும், உத்தர பிரதேசத்தில் மே மாதமும், ஐந்தாண்டு ஆட்சி காலம் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான முன் ஏற்பாடுகள் குறித்து, ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர்.

ஓட்டு சாவடியில் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்வது, ஓட்டுப்பதிவு நடைமுறையை எளிமையாக்குவது, மின்னணு ஓட்டு இயந்திரம், ஓட்டு உறுதி சீட்டு இயந்திரம், தபால் ஓட்டு பெறுவதற்கான வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், கொரோனா தடுப்பு பணி, தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை களப் பணிகளை துவக்குமாறு, தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • அப்புசாமி -

    சட்டு புட்டுனு தேதியை அறிவிச்சுருங்க. மூணாவது அலைக்கு தோதா பறந்து பறந்து வந்து பரப்பணுமில்ல..

  • ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா

    இதற்க்கு நேரு காந்தி இந்திரா அமர் அக்பர் அந்தோணி தான் காரணம் இவர்கள் என்ன செய்வார்கள் தாடி வளர்ப்பார்கள் அத ஒரு மூடர் கூட்டம் நம்பும் அப்புறம் என்ன , வட நாட்டில் பள்ளிக்கூடம் அதிகம் திறந்தாள் தான் இதற்கு விமோச்சனம்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    மூன்றாவது அலை என்கிறார்கள் அனால் இவர்கள் ஐந்து மாநில தேர்தல் : டில்லியில் ஆய்வு கூட்டம் கூடி கழித்து பாருங்கள் கூரான SUCEESS ஆகும் போல் தெரிகிறது

  • Bonda panda - Bakemalar,செயின்ட் கிட்ஸ் நிவிஸ்

    UP UP UP இது நினைவில் இருக்கட்டும். மக்கள் 3 அலை 4 அலை பற்றி கவலை வேண்டாம். ஒன்றியம் விளையாட்டு ஆரம்பிக்கவும். OPERATION கோமாளி.

  • Maheshkumar -

    3rd wave ku ready panniraatheenga Sir... 4th aa kooda irukkalaam...

Advertisement