dinamalar telegram
Advertisement

அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்

Share
ராமேஸ்வரம் : ''மத்திய அரசிடம் ஆலோசித்து, அயோத்தி - ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும்,'' என, உ.பி., போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வந்த அவர், சுவாமி தரிசனத்துக்கு பின் கூறியதாவது:உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும், ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இம்மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதால், மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய அயோத்தி - ராமேஸ்வரம் இடையே, விமான போக்குவரத்து துவக்கப்படும். அடுத்தாண்டு உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (33)

 • அப்புசாமி -

  ராமாயணம் கோதாவரியின் தெற்கே தாண்டி வந்திருக்கவே வாய்ப்பில்லை. தமிழகத்தைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. தற்போதைய ஸ்ரீலங்காவில் சமஸ்கிருதம் பற்றிய குறிப்புகள் இல்லை. இராவணன், இந்திரஜித், மண்டோதரி போன்ற பெயர்களும் திராவிட பெயர்கள் இல்லை. அசுரர் என்னும் இனத்தவர் இன்றும் சட்டிஸ்கர் பகுதியில் வாழ்கின்றனர். இராவணன் என்னும் அசுரன் தற்போதைய இலங்கையில் வசித்ததாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை. குலசேகராழ்வார் ஒரு இராம பக்தர். அதனாலேயே தென் தமிழ்நாட்டில் இராமர் கோவில்கள் அதிகம். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள இராமர் கோவில்கள் பிற்காலத்தவை. இராமாயணம் நல்ல கதைதான். அதன் புனைவுப்புலம் தமிழகமி, தற்கால இலங்கையோ அல்ல.

 • oce -

  Please don't repeat the same comment

 • oce -

  ராமாயணம் நடந்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்.அப்போது சிந்து வெளி கங்கை ஆற்றங்கரை குடிலில் வசித்த வால்மீகி ஆசிரமத்தில் லவ குச என்ற இரு பிள்ளகளுடன் தங்கி இருந்த சீதை தன் சுய சரிதை சொல்லி வர அதை அன்று புழங்கியிருந்த மொழியில் எழுதியவர் வால்மீகி.அன்றிலிருந்த மக்களிடை அவரது சீடர்கள் அதை பரப்பி விட்டனர். கி.மு ஏழாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியாக்கம் பெற்று அதன் பிறகு பாண்டிய மன்னர்களால் தென்னகம் பரவியது. ராமருக்கு இப்போதைய இடத்தில் கோயில் எடுப்பித்தனர். ராமர் பெருமையை உணர்ந்த கம்பர் ராமர் சரிதையை ராம காவியமாக தனக்கே உள்ள அதீத கற்பனைத் திறமுடன் தமிழில் மொழி பெயர்த்தார்.அதன் சிறப்பை மக்களுக்கு எடுத்துக்காட்ட ராமேஸ்வர கோயிலை பாண்டிய மன்னர்கள் மூலம் எடுப்பித்து ( இன்று இலங்கை தனிநாடு.அப்போது வெள்ளையர் ஆட்சியில் இந்திய பகுதி) அக்கோயிலை இலங்கையுடன் தொடர்பு படுத்தியதுடன்.அத்தொடர்புக்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா அதை மிக சாதுர்யமாக ராவணன் அதை ஆண்டதாகவும் அவனால் கடத்தப்பட்ட சீதையை அநுமன் இலங்கைக்கு சென்று கண்டேன் சீதையை என்ற விவரத்தை ராமரிடம் சென்று சொன்னதாகவும் அதன் பின்னர் ராமர் வானர சைன்யங்களுடன் பல ஆயிரம் கி.மீ தூரத்தை காடுகளிலும் நதி வழிகளிலும் கடந்து ராமேஸ்வரம் சென்று போரில் வெற்றி பெற ஈசனை துதித்து சேதுபாலம் கட்டி ( கடலின் ஆழம் இப்போது பத்தடி அப்போது தரை மட்டம் ) கடல் அலைகளால் உருவான கூழாங்கற்கள் நிறைந்த மேட்டு வழி பாதையை சரி செய்து கோயில் முனையிலிருந்து இலங்கைக்கு அப்பாதை வழியாக வானரங்களுடன் சென்றதாக கருதி ராமாயணத்தில் இணைத்து தமிழின் பெருமையை உலகறிய செய்துள்ளார். இப்படித்தான் நடந்திருக்கிறது.ஆனால் உள்டா ராமாயணத்தை நம்புபவர்கள் ஏராளம்.

 • Rajas - chennai,இந்தியா

  தென்னகத்தின் காசி என்று சொல்லப்படும் ராமேஸ்வரத்தில் மன நோயாளிகள் அதிகமாக உள்ளனர். இங்கே வரும் வெளி மாநிலத்தவர்கள் பலர் மனநிலை பாதித்த தங்கள் உறவுகளை இங்கே விட்டு விட்டு போவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். கூடவே வளர்ந்த உறவுகளை கண் காணாத இடத்தில விட்டு விட்டு போகிறார்கள் என்றால் அவர்கள் என்ன மனிதர்கள். இதில் பெண் மனநோயாளிகள் நிலைமை காணவே கொடுமையானது. இதை போல தங்கள் உறவுகளை விட்டு விட்டு போகிறர்வர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போல இன்னொரு கொடுமையான விஷயமும் இந்த நாட்டில் உண்டு. மனநிலை பாதித்த தங்கள் உறவுகளை வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகளில் ஏற்றி வழியில் எங்காவது இறக்கி விட சொல்கிறார்களாம்.

 • yavarum kelir - yadhum vore ,இந்தியா

  Oce அவர்களே, தங்கள் எதிர் கூற்றை ஏதேனும் சாட்சி மூலம் நிரூபித்தால் ஒத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் கம்பனையும் வால்மீகியையும் மட்டுமே மக்கள் சரி என ஏற்றுக்கொள்வார்கள். என்ன சவால் சரிதானே?

Advertisement