dinamalar telegram
Advertisement

கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி காலத்தில், கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன...

Share
கேரளாவில் ஒரு சர்ச் நிர்வாகம், அதிக குழந்தைகளை பெற்றுள்ள குடும்பத்திற்கு மாதம்தோறும் நிதியுதவி வழங்குகிறது. மத நல்லிணக்கத்திற்கு விரோதமான இந்த செயலை, அந்த சர்ச் நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
- காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

'கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி காலத்தில், கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை.மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா, மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. அதுபோல, நல்லசிவன், உமாநாத், பாலசுப்ரமணியன், முத்தையாவின் நுாற்றாண்டு விழாக்களும் கொண்டாடப்படும்.

- தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன்

'உங்கள் கட்சி பத்திரிகைக்கு அதிக விளம்பரங்கள் பெறுவதற்காக, இப்படி நுாற்றாண்டு விழாக்களை கொண்டாட உள்ளீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி.அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இப்போதைய தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு டாக்டர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.
- அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை

'இந்த கொரோனா நேரத்தில், நீண்ட காலமாக சம்பள உயர்வு கேட்கும் நிலையில், அரசு டாக்டர்களை வைத்திருப்பது சரியல்ல...' என, கூறத் துாண்டும் வகையில், அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை பேட்டி.தமிழக அரசு மீது எந்த குறையும் காண முடியாததால், லாட்டரி சீட்டு முறையை கொண்டு வர உள்ளோம் என, இருட்டு அறையில் கறுப்பு பூனையை, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., தேடிக் கொண்டிருக்கிறார்.
- தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

'வருமானத்தை பெருக்க, வேறு என்ன தான் தமிழக அரசு செய்யப் போகிறது என்பது தெரியாததால், இது போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றனவோ...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.அனைத்து பாடப் புத்தகங்களிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, புதிதாக மாற்றப்படும். மத்திய அரசு என வரும் இடங்களில் ஒன்றிய அரசு என மாற்ற வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு.
- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

'வரி வரியாக மாற்றாமல், 'மத்திய அரசு என வரும் இடங்களில், ஒன்றிய அரசு என மாற்றி படியுங்கள்' என, புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி.தமிழகத்தில், தி.மு.க.,வின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. அது, அக்கட்சியின் பிறவிக்குணம். பழி வாங்கும் நடவடிக்கையாக, அ.தி.மு.க.,வினர் மீது வழக்குகளை போடுகின்றனர். அதை எதிர்கொள்ளும் துணிச்சல் எங்கள் கட்சியினருக்கு உள்ளது.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்

'பொய் வழக்குகள் என்றால், நீதிமன்றத்திற்கு சென்று, அதை நிரூபிக்கலாமே; அதற்கு துணிச்சல் அவசியமா என்ன...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

 • Martin - Chennai,இந்தியா

  அதிக குழந்தைகள் இருப்பதால் பொருளாதார சுமையை குறைக்க சர்ச் உதவி செய்கிறது.இதில் என்ன "கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன...' என, சொல்லத் தோன்றும் வகையில்". இது முறைகேடா ?

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  கிறிஸ்துவ மதத்தை பரப்ப தனது முதலமைச்சர் பதவியை நன்றி பயன்படுத்தி கொண்டு அநியாயம் செய்யும் பினராயி விஜயன் ஒழிக ஒழிக

 • Suppan - Mumbai,இந்தியா

  "நல்லசிவன், உமாநாத், பாலசுப்ரமணியன், முத்தையாவின் நூற்றாண்டு விழாக்கள் இவர்கள் எல்லோரும் சீனாவின் அடிவருடிகள். கம்யூனிசம் என்ற பெயரில் நாட்டில் நச்சை விதைத்தவர்கள்..

 • sridhar - Chennai,இந்தியா

  Pastors will help in getting children , not only with money but in every conceivable way.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  கேரளாவில் ஒரு சர்ச் நிர்வாகம், அதிக குழந்தைகளை பெற்றுள்ள குடும்பத்திற்கு மாதம்தோறும் நிதியுதவி வழங்குகிறது இதே மாதிரி ஆர் எஸ் எஸ் இயக்கமும் செய்தால் இந்துக்கள் பயன் அடைவார்கள். அனால் ஆர் எஸ் எஸ் இயக்கம் இதை செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் நோக்கம் மத சண்டைகள் உருவாக்குவது மட்டுமே. தமிழர்களே விழிப்புடன் இருங்கள் ஆர் எஸ் எஸ் கயவர்களை விரட்டி அடிப்போம்

Advertisement