dinamalar telegram
Advertisement

அடிக்கடி கெடுது ஆவின் பால் பாக்கெட்: கிழமைக்கு ஒரு வண்ணப்புள்ளி வைக்க ஆலோசனை

Share
விற்காத பால் பாக்கெட்களை முகவர்கள் விநியோகிப்பதால், ஆவின் பால் பாக்கெட் அடிக்கடி கெட்டுப்போவதாக புகார்கள் குவிகின்றன. இதைத் தவிர்க்க, கிழமைக்கொரு வண்ணப்புள்ளியை பாக்கெட்டில் அச்சிட வேண்டுமென்ற ஆலோசனை அரசிடம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் தயாரிப்பான ஆவின் பாலை, மக்கள் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். கடந்த மே மாதத்தில், பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைக்கப்பட்ட பின், தினமும், 26 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக, ஆவின் பால் பாக்கெட் அடிக்கடி கெட்டுப்போவதாக புகார் அதிகரித்து வருகிறது. அப்பார்ட்மென்ட்களில் மொத்தமாக, ஆவின் பால் பாக்கெட் வினியோகிக்கும்போது, முந்தைய நாள் தயாரிப்பு பால் பாக்கெட்களை வினியோகித்து விடுவதாக தெரியவந்துள்ளது. பால் முகவர்கள், முந்தைய நாளில் விற்பனையாகாத பாக்கெட்களை, இடையிடையே கலந்து விடுவதுதான் இதற்குக் காரணம்.

ஆவின் பால் பாக்கெட்களில், தயாரிப்பு தேதி மிகச்சிறிய எழுத்தில் குறிப்பிடப்படுவதால், வயதானவர்கள், பாமர மக்களால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில ஓட்டல்கள், பேக்கரிகளில் நிறைய பால் பாக்கெட்களை வாங்கி, மொத்தமாகக் காய்ச்சும்போது, ஒரு பால் பாக்கெட்டால் மொத்தப் பாலும் கெட்டுப் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் சிறு வியாபாரிகள், டீக்கடைக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முகவர்கள், கடைக்காரர்கள் செய்யும் இந்தத் தவறுகளுக்கு, ஆவின் நிர்வாகம் பொறுப்பேற்பதில்லை. கள அலுவலர்களும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.

'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்துார்' அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர், ஆவின் நிர்வாகத்துக்கு சில யோசனைகளைத் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.அதில், ஒவ்வொரு தேதி தயாரிப்புக்கும் ஒரு வண்ணக் குறியீட்டை அச்சிட வேண்டும் என்பது முக்கியமான ஆலோசனை. ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு புள்ளியை வைத்தால் மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியுமென்று அதில் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆவின் அலுவலகத்தில் இதுபற்றி கேட்டபோது, 'எந்தப் பகுதியில் இந்தத் தவறு நடந்தது என்று, ஆதாரத்துடன் அந்தந்த மாவட்ட ஆவின் அலுவலகங்களில் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட முகவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பால் பாக்கெட்களில் தினமும் ஒரு வண்ணப்புள்ளி அச்சிடுவது தொடர்பான ஆலோசனை, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (38)

 • oce -

  நா ஒரு முட்டாளுங்க இது நல்லா தெரிஞ்சவங்க அப்பவே சொன்னாங்க. முன்னாலெ அணில காட்டுனாங்க இப்போ சோயா பீன்ஸ காட்டுறாங்க. நாளைக்கு ரேஷன் கட அரிசியிலெ தவிட்ட காட்டுவாங்க. இலவச பஸ் கெடச்சும் பாஸ் கெடக்கலிங்க, ஆயிரம் ரூபாய கேட்டக்கா எட்டி எட்டி ஒதைக்ககறாங்க.நா ஒரு முட்டாளுங்க. நா கொடுத்த கோரிக்க கம்முன்னு கீதுங்கஎன்னான்னு கேட்டாக்கா மொறச்சு மொறச்சு பாக்குதுங்க.

 • oce -

  நா ஒரு முட்டாளுங்க இது நல்லா தெரிஞ்சவங்க அப்பவே சொன்னாங்க. முன்னாலெ அணில காட்டுனாங்க இப்போ சோயா பீன்ஸ காட்டுறாங்க. நாளைக்கு ரேஷன் கட அரிசியிலெ தவிட்ட காட்டுவாங்க. இலவச பஸ் கெடச்சும் பாஸ் கெடக்கலிங்க, ஆயிரம் ரூபாய கேட்டக்கா எட்டி எட்டி ஒதைக்ககறாங்க.நா ஒரு முட்டாளுங்க. நா கொடுத்த கோரிக்க கம்முன்னு கீதுங்கஎன்னான்னு கேட்டாக்கா மொறச்சு மொறச்சு பாக்குதுங்க.

 • oce -

  ஒரு லிட்டருக்கு மூணு ரூபாய் குறைப்பதாக சொல்லியதை ஏமாந்து ஓட்டுப் போட்ட மூடர்களே.போதுமாஇன்னும் வேணுமா

 • oce -

  ஒரு லிட்டருக்கு மூணு ரூபாய் குறைப்பதாக சொல்லியதை ஏமாந்து ஓட்டுப் போட்ட மூடர்களே.போதுமாஇன்னும் வேணுமா

 • Uthiran - chennai,இந்தியா

  நாங்கள் ஆவின் பாலை மட்டும்தான் வாங்குகிறோம். வாசகர்கள் குறிப்பிட்ட கசப்பான அனுபவம் எதுவும் எங்களுக்கில்லை. ஒரு குறிப்பிட்ட கடையில் வாங்கிய பால்தான் அரிதாக கெட்டுப்போனது. அதற்கு காரணம் அந்தக்குறிப்பிட்ட கடைக்காரர் மின்சார செலவை குறைப்பதற்காக பாலை மிக்கதாமதமாக குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதுதான். இதில் ஆவினை குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. ஆவின் பாலில் இங்கே ஒருவர் குறிப்பிட்டதுபோல் சோயா பவுடரை கலந்திருக்கலாம். ஆனால் தனியார் நிறுவன பாலில் என்ன கண்றாவியை கலக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது வாங்கிய ஆவின் பால் மிக சீக்கிரமாக கெட்டுப்போனது.. அதற்கு முன்போ, பின்போ அந்த பிரச்னை இல்லை.

Advertisement