LOGIN
dinamalar telegram
Advertisement

மது அருந்தும் இடமானது பொன்பத்தி ஏரிக்கரை சாலை: பெண்கள் அச்சம்

Share
செஞ்சி; பொன்பத்தி ஏரிக்கரை சாலையில் இரவு, பகலாக மது அருந்துபவர்களால் பெண்கள் அச்சத்துடன் செல்லும் அவலம் உள்ளது.செஞ்சியை ஒட்டிய கிராமங்களாக பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி, மேல்எடையாளம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் செஞ்சிக்கு வருகின்றனர். இங்கிருந்து ஏராளமான இளம் பெண்கள் செஞ்சியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்றனர்.செஞ்சியில் இருந்து பொன்பத்திக்கு ஒன்னரை கி.மீ., துாரம் ஏரிக்கரை மீது செல்ல வேண்டும். அடர்த்தியான மரங்கள் நிறைந்த இந்த சாலையில் சில மாதங்களாக இரவு, பகலாக மது பிரியர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துகின்றனர்.குறிப்பாக துர்கை அம்மன் கோவிலுக்கு அருகிலும், புதிதாக கட்டி முடித்துள்ள மதகின் படிகளிலும் மது அருந்துகின்றனர். இந்த வழியாக நடந்தும், சைக்கிளிலும், மொபைட்டிலும் ஏராளமான பெண்கள் செல்கின்றனர். சமீப காலமாக மது அருந்துவது அதிகரித்திருப்பதால் ஆண்களின் துணையின்றி பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொன்பத்தி ஏரிக்கரை சாலையில் போலீசார் இரவு மற்றும் பகல் நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும். மது அருந்துபவர்களை எச்சரிப்பதுடன், ஏரிக்கரை சாலை பொது இடம் என்பதால் அங்கு மது அருந்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகையை ஏரிக்கரையின் துவக்கத்தில் இரண்டு பக்கமும் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement