LOGIN
dinamalar telegram
Advertisement

குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து சாவு

Share
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் தீக்குளித்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரகண்டநல்லுார் அடுத்த பரனுார் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி தீபா, 30; இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் ராதாகிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால், மனமுடைந்த தீபா கடந்த 24ம் தேதி நள்ளிரவு வீட்டில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு கணவர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement