LOGIN
dinamalar telegram
Advertisement

கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழுக் கூட்டம்மேலாண் இயக்குனர் வராததால் தள்ளிவைப்பு

Share
விழுப்புரம்; விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் மாதாந்திர நிர்வாகக்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வங்கித் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இயக்குனர் செந்தில் பேசுகையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொரோனா கடன் வழங்கவில்லை. கடந்த 6 மாதங்களாக வங்கி நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு, மேலாண் இயக்குநர் வருவது இல்லை. மேலாண் இயக்குநரின் நிர்வாக சீர்கேட்டை அமைச்சர் சண்முகத்திடம் தெரிவிக்க வேண்டும்' என்றார்.மேலும், அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பல நல்ல திட்டங்களை நிர்வாகக்குழு பரிந்துரைத்தாலும் அதை மேலாண் இயக்குனர் செயல்முறைப்படுத்துவது இல்லை. தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் நிர்வாகக்குழுவில் இயக்குனர்கள் வலியுறுத்தினர்.இதேபோன்று, மேலாண் இயக்குனர் வராமல் மாதாந்திர கூட்டத்தை நடத்தக் கூடாது என்று இயக்குனர்கள் கூறினர். இதனால், நிர்வாகக்குழுக் கூட்டம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைப்பதாக, வங்கித் தலைவர் கூறினார்.பொதுமேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன், இயக்குனர்கள் தனுசு, பாஸ்கர், ராஜேஸ்வரி, தயாளுபதி, தாயம்மாள், விஜயா பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement