LOGIN
dinamalar telegram
Advertisement

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

Share
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி பசுவும், கன்றும் இறந்தன.விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ், 45: விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வயலில் தனக்கு சொந்தமான பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியை மேய்த்துக் கொண்டிருந்தார்.மாலை 6:00 மணியளவில் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்ப முயன்றபோது திடீரென பலத்த மின்னல் இடியுடன் மழை பெய்தது. இதனால் மாடுகளை வயல் வெளி பகுதியில் விட்டு விட்டு, அருகில் இருந்த மோட்டார் கொட்டகையில் முருகதாஸ் ஒதுங்கினார்.அப்போது மின்னல் தாக்கியதில், வயல் வெளியில் நின்றிருந்த பசுவும், கன்றும் அதே இடத்தில் இறந்தன. வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement