LOGIN
dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Share
விக்கிரவாண்டி; மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாற்றுத் திறனாளிகளை சேர்க்கக் கோரி விக்கிரவாண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், துணைச் செயலாளர் வசந்தமாலா, மாவட்டக்குழு அழகுவேல் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு வழக்கறிஞர் சங்கரன், மாவட்ட பொருளாளர் உமா, மாவட்ட துணைச் செயலாளர் நடராஜன் ஆகியோர் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் விவசாய எதிர்ப்பு அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கக் வலியுறுத்தப்பட்டது.நிர்வாகிகள் தாமோதரன், ராமமூர்த்தி, அபிராமி, ஜெயலட்சுமி, தென்னரசு, வெங்கடேசன், ஆதி மூலம், கோவிந்தராஜ், பிரபு, ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement