LOGIN
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., ஐ.டி., நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து

Share
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி நகர அ.தி.மு.க., சார்பில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் தொழில்நுட்ப பிரிவு துவங்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி பேரூராட்சியில் நியமனம் செய்யப்பட்ட ஐ.டி., விங் நிர்வாகிகள் நேற்று நகர செயலாளர் பூர்ணராவ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் ஈஸ்வரன், நகர தலைவர் பிரபு, துணைத்தலைவர்கள் ரவீந்திரன், முபாரக் அலி, இணைச் செயலாளர்கள் சுதாகர், இந்துமதி, மார்ட்டின் பிஜோ, தினேஷ், துணைச் செயலாளர்கள் வேல்முருகன், ரவிக்குமார், ராஜ்குமார், பிரபு, கிருஷ்ணராஜ், பொருளாளர் பிரதீப் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement