LOGIN
dinamalar telegram
Advertisement

மரக்கன்று நடும் விழா 

Share
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மழையம்பட்டு ஏரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சென்னை ராணுவ அலுவலக கூடுதல் கட்டுப்பாட்டாளர் அருளானந்தன் தலைமை தாங்கினார். கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி தாளாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ராம்குமார் மற்றும் முகமது அலி பேக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பயனாளிகளை வைத்து 1200 மரக்கன்றுகள் நட்டனர். மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குணசேகரன், ஊராட்சி செயலர் துரை முருகன், தர்மலிங்கம், நாகமுத்து, பசுமை கிராம குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement