LOGIN
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., இளைஞர் பாசறை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Share
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் முகையூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனை மற்றும் இளைஞர் பாசறை துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குமரகுரு இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அமைப்பை துவக்கி வைத்தார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட பாசறை செயலாளர் ராகேஷ், மாவட்ட துணைச் செயலாளர் சரசு ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். முகையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனபால்ராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பேசிய குமரகுரு எம்.எல்.ஏ., வரும் தேர்தலில் பூத் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் 25 வீடுகளுக்குச் சென்று கட்சியின் கொள்கைகளை விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் கலா, கைத்தறி சங்கத் தலைவர் கார்த்திகேயன், சரவணன், ரகோத்தமன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மதிவாணன், காந்தி மற்றும் முகையூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement