dinamalar telegram
Advertisement

போலீஸ் - அ.தி.மு.க.,வினர் மோதல்

Share
துாத்துக்குடி:போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், டி.எஸ்.பி., காயமுற்றார்.


போலீஸ் தடியடியில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., காயமடைந்தார்.துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், அக்., 9ல் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வில் இணைந்தார்.விளாத்திகுளத்தில் நேற்று மாலை, தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சியை, மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் முன்னிலையில் நடத்தினார்.

போலீஸ் அனுமதியுடன் மாலை, 4:00 முதல், 5:30 மணி வரை நிகழ்ச்சி நடந்தது.அதே நேரத்தில், அ.தி.மு.க.,வினரும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த, விளாத்திகுளம் எம்.எல்.ஏ., சின்னப்பன் தலைமையில், சூரங்குடி சாலையில் ஊர்வலமாக வந்தனர்.

போலீசார், சிறிதுநேரம் காத்திருக்கும்படி கூறினர். அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கோவில்பட்டி டி.எஸ்.பி., கலைக்கதிரவன் மற்றும் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.போலீசார் தடியடி நடத்தி, அ.தி.மு.க.,வினரை கலைத்தனர். இதில் காயமுற்ற, எம்.எல்.ஏ., சின்னப்பனை, கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மா மீட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

போலீசாரை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில், ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.டி.ஐ.ஜி., பிரவீன்குமார் பேச்சில், போராட்டம் முடிவுக்கு வந்தது. பின், அ.தி.மு.க.,வினர் கொடியேற்றி கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement