dinamalar telegram
Advertisement

நின்ற லாரி மீது மினிவேன்மோதல்; 2 பேர் பலி

Share
துாத்துக்குடி:துாத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் எப்போதும்வென்றான் அருகே இருட்டில் நின்ற லாரி மீது மினிவேன் மோதியது.


மினிவேன் டிரைவரான சாத்தான்குளம் செட்டிகுளத்தை சேர்ந்த ஜேசுதாஸ் 20, உரிமையாளர் உதயநேரி ராஜ்குமார் 23, இறந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ராயபூபதி 28, லாரியில் புறப்பட்டார். நேற்று அதிகாலை 2 மணியளவில் எப்போதும் வென்றான் அருகே சர்வீஸ் ரோட்டில் லாரியை நிறுத்தி துாங்கினார்.


கோவையில் இருந்து துாத்துக்குடி வந்த மினிவேன், நின்ற லாரி மீது மோதியது. இதில் ஜேசுதாஸ், உதயநேரி ராஜ்குமார் இறந்தனர். எப்போதும் வென்றான் போலீசார் விசாரித்தனர். இந்த நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது தொடர்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement