dinamalar telegram
Advertisement

விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி அ.தி.மு.க., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு

Share
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பன், தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன், மாஜி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் தி.மு.க.,வில் இணைந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட பொறுப்பாளர், எம்.எல்.ஏ.வான கீதாஜீவன் முன்னிலையில் அனுமதி பெற்று விளாத்திகுளத்தில் தி.மு.க.,கொடியேற்றினார்.போட்டியாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பனும் அதேநேரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த வந்தார். போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில் அதிக கூட்டத்தை சேர்த்தது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னப்பன் உட்பட அவரது தரப்பு மீது ஒரு வழக்கு பதியப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement