dinamalar telegram
Advertisement

ஓடிடியில் புதிய சினிமா வெளியிடுவதை தடுக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Share
துாத்துக்குடி:''புதிய சினிமாக்களை ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் நேரிடையாக வெளியிடுவதை தடுக்க சட்டம் தனியாக இல்லை'' என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி அருகே வெள்ளாங்கோட்டை, இலுப்பையூரணியில் புதிய கால்நடை மருத்துவமனையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தனர்.

கடம்பூர் ராஜூ கூறுகையில், ''புதிய சினிமாக்களை ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுவதை தடுக்க சட்டங்கள் இல்லை. கொரோனா காலத்தில் வேறு வழியில்லை. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு ஜெயலலிதா 10 கோடி ரூபாய் வழங்கி குடியரசு தலைவரை வரவழைத்து நடத்தினார். சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது முதல்வர் பழனிசாமி ரூ.75 லட்சம் வழங்கியுள்ளார்.


கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழக அரசின் பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாக்களை திரையிட செய்தோம்.அதன் பயனாக இயக்குனர் பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படங்கள் பனோரமா விருதுகளை பெற்றுள்ளன. தமிழ் சினிமாக்கள் சர்வதேச தரத்தை பெற்றுள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கான அரசு மானியத்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2015--2016 வரை தயாரித்த 149 படங்களுக்கு ரூ.7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement