dinamalar telegram
Advertisement

ஓடிடியில் சினிமா வெளியீடு: தடுக்க தனி சட்டம் இல்லை

Share
துாத்துக்குடி:''புதிய சினிமாக்களை, ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் நேரிடையாக வெளியிடுவதை தடுக்க, தனியாக சட்டம் இல்லை,'' என, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜு கூறினார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:புதிய சினிமாக்களை, ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுவதை தடுக்க, சட்டங்கள் இல்லை. கொரோனா காலத்தில் வேறு வழியில்லை. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு, ஜெயலலிதா, 10 கோடி ரூபாய் வழங்கி, குடியரசு தலைவரை வரவழைத்து நடத்தினார்.சர்வதேச திரைப்பட விழாவிற்கு, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, முதல்வர், இ.பி.எஸ்., 75 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். கோவா சர்வதேச திரைப்பட விழாவில், தமிழக அரசின் பங்களிப்பாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.அங்கு, தமிழ் சினிமாக்களை திரையிட செய்தோம். அதன் பயனாக, இயக்குனர் பார்த்திபனின், 'ஒத்தசெருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படங்கள் பனோரமா விருதுகளை பெற்றுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement