dinamalar telegram
Advertisement

கோவில்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

Share
தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அய்யலுசாமி இன்று(அக்.,23) காலமானார். அவருக்கு வயது 92. அவரின் இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு அவரது சொந்த ஊரான பெருமாள்பட்டியில் நடைபெறுகிறது.கடந்த 1996 - 2001 ஆண்டில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர், தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement