dinamalar telegram
Advertisement

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க ஆலோசனை கூட்டம்

Share
ப.வேலூர்: நாமக்கல் மாவட்ட அனைத்து பேரூராட்சிகள் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க கூட்டம், ப.வேலூரில் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு மேற்பார்வையாளர்களை அரசு நிலையாக்கப்பட்ட பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மேற்பார்வையாளர்களுக்கு துப்புரவு ஆய்வாளர் பயிற்சி வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த கீழ் நிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement