dinamalar telegram
Advertisement

நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா

Share
நாமக்கல்: நவராத்திரி விழாவையொட்டி, நாமக்கல் நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து தினசரி பூஜைகள் நடைபெறும். ஒன்பது நாள்கள் நடக்கும் ஊஞ்சல் உற்சவ சேவையின்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத நரசிம்மரும், நாமகிரி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பர். நடப்பாண்டில், கொரோனா தொற்று பரவலால் கோவில்கள் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. விழாக்காலங்களில் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நரசிம்மர் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபடும் வைபவம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊஞ்சல் உற்சவ சேவை மட்டும் நடந்து வருகிறது. மாலையில் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அர்ச்சகர்கள் மட்டும் சுவாமிக்கு பூஜைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஏழாம் நாளான நேற்று தங்க கவசத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத நரசிம்மர் ஊஞ்சல் சேவையிலும், கஜலட்சுமி அலங்காரத்தில் நாமகிரி தாயாரும் அருள்பாலித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement