dinamalar telegram
Advertisement

விதிமுறை மீறல் வழக்கு: 379 பேருக்கு அபராதம்

Share
நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 376 பேர் உள்பட, 379 பேர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த, 376 பேர் மீது வழக்கு பதிந்து, 75 ஆயிரத்து, 200 ரூபாய்; பொது இடங்களில் எச்சில் துப்பிய, மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 1,500 ரூபாய் என, மொத்தம், 379 பேருக்கு, 76 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement