dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Share
ராசிபுரம்: ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியின் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு முக கவசம், கையுறை அணிதல், கை கழுவுதல் உள்ளிட்ட விதி முறைகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பள்ளியில் இயங்கி வரும் ஜீனியர் ரெட்கிராஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி, பிரதான வீதிகள் வழியாக சென்றது. தலைமையாசிரியர் ஆண்ட்ரூஸ், கணித முதுகலை ஆசிரியர் சவுந்தரராஜன், ஜூனியர் ரெட்கிராஸ் பொறுப்பாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement