dinamalar telegram
Advertisement

விலையில்லா சைக்கிள் உதிரி பாகங்கள் வரத்து

Share
நாமக்கல்: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் கல்வியாண்டில் வழங்குவதற்காக மாவட்ட வாரியாக சைக்கிள் உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு, மொத்தம், 770 சைக்கிள்களுக்கான உதிரிபாகங்கள் நேற்று வந்தன. அவற்றை பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் பாதுகாப்புடன் இறக்கி வைத்தனர். இன்னும் ஓரு சில நாட்களில் சைக்கிள் நிறுவனத்தில் இருந்து வரும் ஊழியர்கள், உதிரிபாகங்களை இணைத்து சைக்கிளாக உருவாக்கி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைப்பர் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement