dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனம் மீது வழக்கு: எஸ்.பி.,

Share
நாமக்கல்: ''பாதுகாப்பு நெறிமுறை, சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் வணிக நிறுவனங்கள் மீது, வழக்கு பதிவு செய்வதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்,'' என, எஸ்.பி., சக்தி கணேசன் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன் தலைமை வகித்து, 'பண்டிகை கால வியாபாரம் மற்றும் பாதுகாப்பு' குறித்து, வணிகர்களிடையே பேசியதாவது: பண்டிகை கால கூட்ட நெரிசலை, வணிகர்கள் மிக கவனத்துடன் சமாளிக்க வேண்டும். அதில், பாதுகாப்பு நெறிமுறை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் வணிக நிறுவனங்கள் மீது, வழக்கு பதிவு செய்வதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும். கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் விஷயத்தில், வணிகர்களுக்கு எவ்வித சலுகையும் கொடுக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம், ஒலிபெருக்கியில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அதற்கு, வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் பேசுகையில், ''வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவசியம் காட்சிப்படுத்த வேண்டும்,'' என்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன், அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement