dinamalar telegram
Advertisement

சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுகோள்

Share
ராசிபுரம்: 'உழவர் சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை உள்ளது. அடுத்து, நாமக்கல்லில்தான் உழவர் சந்தை இருப்பதால், 25 கி.மீ., தொலைவில் உள்ள மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை வெண்ணந்தூர், ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். அனைத்து காய்கறிகளும் கிடைப்பதால் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களும் வருகின்றனர். காலை, 5:00 மணிக்கு வியாபாரம் தொடங்கினாலும், 8:00 மணிக்கெல்லாம் அனைத்து காய்கறியும்விற்றுவிடும். உழவர் சந்தை வளாகத்திற்குள் விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வசதி, பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிகாலை வரும் விவசாயிகள், காலை கடனை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். தற்போது, பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பிடத்தை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. உழவர் சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை பராமரித்து, பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement