dinamalar telegram
Advertisement

மின்சார வாரியம் தனியார் மயமாகாது: அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

Share
நாமக்கல்: ''தமிழக மின் வாரியம் எந்த சூழ்நிலையிலும், தனியார் மயமாகாது,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.


நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் அவர் கூறியதாவது: ப.வேலூர், ராஜ வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக, இதுவரை இல்லாத அளவு, 184 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். 'பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும்' என, விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர். கலெக்டர் மெகராஜ், சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, வேகப்படுத்தியதையடுத்து, அப்பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. வரும், 1க்குள் பணிகள் முடிக்கப்பட்டு, 2ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். எந்த சூழ்நிலையிலும், தமிழக மின்வாரியம், தனியார் மயமாகாது. அதற்கு, எந்த காலகட்டத்திலும், முதல்வர் உடன்படமாட்டார். தனியார் மயத்துக்கு ஆதரவாக அரசு இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, ''தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், கவர்னரை சந்தித்து, அமைச்சர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். கவர்னரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அரசியலுக்காக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement