கால்வாயில் தடுப்பு அமைத்ததால் குளத்திற்கு செல்லும் மழைநீர்
பொதட்டூர்பேட்டை; பேரூராட்சியின் மழைநீர் கால்வாயின் குறுக்கே, சிறிய அளவிலான தடுப்பு ஏற்படுத்தி, மழை நீரை அருகில் உள்ள குளத்திற்கு பேரூராட்சி அதிகாரிகள் திருப்பி விட்டுள்ளனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பொதட்டூர்பேட்டை கிராமத்தின் மேற்கில், ஆறுமுக சுவாமி மலையும், கிழக்கில் பாண்டரவேடு ஏரியும் உள்ளன.மலையில் இருந்து ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. இதற்காக, மழைநீர் கால்வாய்களும் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த கால்வாயின் பாதையில், திருத்தணி சாலையில், சமுதாயக்கூடம் அருகே உள்ள ஒரு குளம், சமீபத்தில் துார் வாரி சீரமைக்கப்பட்டது.அப்போது, கால்வாயில் இருந்து குளத்திற்கு தண்ணீரை திருப்பிவிட ஏதுவாக, சிறிய அளவிலான தற்காலிக தடுப்பு பொருத்தும் கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், 'நிவர்' புயல் மழையின் போது, கால்வாயில் பெருக்கெடுத்து பாய்ந்த தண்ணீரை, பேரூராட்சி அதிகாரிகள், நேற்று தடுப்பு பொருத்தி, குளத்திற்கு தண்ணீரை திருப்பி விட்டனர். இதன் மூலம், குளம் வேகமாக நிரம்பி வருகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!