dinamalar telegram
Advertisement

திருவள்ளூரில் 102 ஏரிகள் சதம்

Share
திருவள்ளூர்; 'நிவர்' புயலால், திருவள்ளூர் மாவட்டத்தில், 102 பொதுப்பணித் துறை ஏரிகள், முழு கொள்ளளவை எட்டின.திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்துார், பூண்டி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி என, மாவட்டம் முழுதும், பெய்த தொடர் மழையால், சாலைகளில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.திருவள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பகுதி, அம்சா நகர் உள்ளிட்ட, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, குளமாக காட்சியளிக்கிறது.மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன. மேலும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன.இவற்றில், ஆரணி ஆறு வடிநில கோட்டத்தில், 70 ஏரிகள், 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 90 முதல், 50 சதவீதம் வரை, 173 ஏரிகள் நிரம்பி உள்ளன.கொற்றலை ஆறு நீர்பாசன பகுதியில், 32 ஏரிகள், 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 50 முதல், 90 சதவீதம் வரை, 124 ஏரிகளும், 50 சதவீதத்திற்குள், 180 ஏரிகளும் நிரம்பி உள்ளன.நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, தாமரைப்பாக்கத்தில், 19.1 செ.மீ., மழை பதிவாகியது. காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள், நேற்று எடுத்த கணக்கெடுப்பில், மொத்தமுள்ள, 381 ஏரிகளில், 121 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.தவிர, 254 ஏரிகள் - 75 சதவீதம்; 91 ஏரிகள் - 50 சதவீதம்; 22 ஏரிகள் - 25 சதவீதம்; 2 ஏரிகள் - 25 சதவீதத்திற்கு குறைவானதாக அளவில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.மாவட்டம் முழுவதும் பெய்தநேற்று காலை வரை மழையளவு இடம் மழையளவு (செ.மீட்டரில்)தாமரைப்பாக்கம் 19.1பள்ளிப்பட்டு 17.5சோழவரம் 15.9பூந்தமல்லி 15.4திருவள்ளூர் 14.7கும்மிடிப்பூண்டி 14.5செங்குன்றம் 13.1திருத்தணி 12.9பூண்டி 12.0ஜமீன் கொரட்டூர் 11.7பொன்னேரி 10.3திருவாலங்காடு 9.3ஆர்.கே.பேட்டை 8.0ஊத்துக்கோட்டை 7.5மாவட்டம் முழுதும் பெய்தநேற்று காலை வரையிலான மழையளவு விபரம்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement