பாதுகாப்பு மையத்தில் 1,309 பேர் தங்க வைப்பு
திருவள்ளூர்; புயல் பாதுகாக்க வைக்கப்பட்ட, 36 மையங்களில் தற்போது, ஆயிரத்து, 309 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், நிவர் புயலால் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பாக தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர், மீஞ்சூர், திருத்தணி உட்பட, மாவட்டம் முழுதும், 36 இடங்களில், பாதுகாப்பு மையங்கள் அமைத்தது.இங்கு, தங்குவோருக்கு தேவையான, உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.நேற்று மாலை நிலவரப்படி, பாதுகாப்பு மையங்களில், 1,309 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!