dinamalar telegram
Advertisement

நிவர் புயல் பாதிப்பு: செய்தி சில வரிகளில்...

Share
மையங்களில் மருத்துவ முகாம்கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், வெண்மனம்புதுார் கன்னியம்மன் நகரில், மழைநீரால் பாதிக்கப்பட்ட, 32 குழந்தைகள் உட்பட, 116 பேர், பிஞ்சிவாக்கம் ஊாட்சியில், 32 பேர் என, பல ஊராட்சிகளைச் சேர்ந்த, 368 பேர், Fஅந்தந்த ஊராட்சி அரசு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர்.அதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூர் ஊராட்சி மலையடிவாரத்தில் வசிக்கும் இருளர் காலனியில் பாதிப்பு ஏற்படவே, அவர்கள், கால்நடை மருந்தகத்தில், நேற்று தங்கவைக்கப்பட்டனர்.இவர்களுக்கு, சுகாதாரத் துறை சார்பில், நேற்று, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பிஞ்சிவாக்கம் அரசு பள்ளியில் நடந்த முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி தலைமையில், நடமாடும் அரசு மருத்துவ குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.பசு மாடு பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், தன் வீட்டின் மாட்டு கொட்டகையில், பசு மாடு மற்றும் கன்றை கட்டி வைத்தார்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மாட்டு கொட்டகை இடிந்து விழுந்ததில், பசுவும், கன்றும் அதே இடத்தில் இறந்தன.அதேபோல், பனப்பாக்கம் கிராமத்தில், மின்கம்பியின் மீது மரக்கிளை விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.ராமாபுரம் பெரிய ஏரியின் மதகு சேதம் அடைந்ததால் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள், உடனடியாக சீரமைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement